உன் சிரிப்பினில்...
Sunday, May 1, 2011
நம்பிக்கை !!
தன் வாழ்க்கைக்கு தேவையானதை
ஒருவன் பெற எத்தனை போராட்டம் !!
ஒருவன் பெற்றதை விட,
பெற வேண்டியதை நோக்கித்தான்
இருக்கிறது அவனது வாழ்நாளின் ஓட்டம்!!
அந்த கோட்டைத் தொட்டு விடுவோம்
என்ற நம்பிக்கை தான்,
அவனுக்கு கொடுக்கும் உயிரோட்டம் !!
Thursday, March 31, 2011
நம்பிக்கையின் முதல் விதை ஆனந்தம் !
உள்ளத்தில் ஆனந்தம் நிறைய,
உங்கள் உள்ளத்தில் நம்பிக்கையும் நிறையும் !
உள்ளத்தில் ஆனந்தம் குறைய,
உங்கள் உள்ளத்தில் நம்பிகையும் குறையும் !
நம்பிக்கையின் முதல் விதை ஆனந்தம் !
Tuesday, March 29, 2011
இறைவனின் அடையாளம்
"மானிடா நீ ஒரு நாளும் மறவாதே
இறைவன் உன்னை பார்த்துக்கொண்டுத் தான் இருக்கிறார் என்று !
அன்பே இறைவனின் அடையாளம், நீயும் இறைவனை காணலாம்."
உலகமும் உன்னை அறிந்துக் கொள்ளும் !
நீ எதிர்பார்க்கும்
அனைத்தையும் உலகம்
உன்னிடம் தந்துவிடாது !
உலகம் உன்னிடம் இருந்து
எதிர்பார்க்கும் அனைத்தையும்
பெறவும் முடியாது !
உன்னகென ஒரு
உலகம் இருக்கு அதை
தேடிக்கொள், நீயே உருவாக்கலாம் !
உலகமும் உன்னை அறிந்துக் கொள்ளும் !
உலகமும் உன் பின்னால் !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)