
நள்ளிரவில் ஆழ்ந்த நித்திரையில்,
தேவதையின் வருகையின் எதிர்பார்ப்பின் போது,
ஒரு குட்டி தேவதையின் அழுகையில்,
நான் விழித்துக் கொண்டேன் !!
ஊரே அமைதியான நிலையில்,
தன் தாயிடம் பசியை வெளிப்படுத்தியது,
மிகுந்த சப்தத்துடன் அந்த அழுகை!!
பசியை தாய் நீக்கியதும்,
மழலையின் சிரிப்பு சத்தம் மட்டும்,
"குவா! குவா!" என்றது,
என் நித்திரையில் தோன்றியது,
அழுகையும் சிரிப்பும் மட்டுமே போதும்,
பின்சு குழந்தையும், தாயும் உரையாட வென்று!!
No comments:
Post a Comment