Thursday, August 1, 2013

சூரியா





மலைகள் ஆக நண்பர்களும் சூழ்ந்து இருக்க,

சோலையாக உறவினர்களும் பசுமை போல காட்சி அளிக்க,

நதிகளாக புது நாட்களும் ஓட,

இனிய கானங்களுடன் பறவைகளும் பார்க்க,

தன்னந்து தனியாக தனித்து நிற்கிறேனே நான்!!

சிரித்த முகத்துடன் !! என்னை பார்க்கிறாயே சூரியகாந்தி !!

என்னை போலவே நீயும் இருக்கிறாயே ?

நானோ என்னை எரித்துக் கொண்டு சிரிக்கிறேன் !!

நீயோ என்னை காண உன் மென்மையான சிரிப்பாள் கவர்கிறாயே ?

உன் சிரிப்பாள் நான் எரிகிறதையே மறக்கின்றேன் !!

பூமி என்னை மறைத்தாலும் திரும்பிக் கொண்டாலும்,

உன்னை காண தினமும் வருவேன் தவறாமல்!!

அதனால் தானோ நாம் பிரியாமல் இருக்க,

உன் பெயரிலேயே சேர்ந்துக்கொண்டு இருக்கிறேன் ?

No comments: